Tuesday, October 12, 2010

சாதனைத் தமிழன்!



சென்னை IIT யில் மெக்கானிக்கல் பட்டம் பெற்று, ONGC யில் பொறியாளாராக இருந்தும், விவசாயம் மீது கொண்ட காதலினால் பதவியைத் துறந்து முழு நேர விவசாயியாக வெற்றிகரமாய் வலம் வரும் திரு. மாதவன் பற்றிய கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன்.

அந்த கட்டுரையின் முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும் http://www.employabilityfirst.com/?p=188&cpage=1

ஆரம்ப காலத்தில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் அவதிப் பட்டதையும், தன் முனைப்பில்  விவசாய நுட்பங்களை கற்றுக் கொண்டதையும் விரிவாக கூறியிருக்கிறார். இஸ்ரேலுக்கு தான் மேற்கொண்ட பயணமும், அதில் கிடைத்த படிப்பினையுமே தன்னை இன்றைக்கு வெற்றிகரமானவனாய் ஆக்கியிருப்பதாகவும் கூறுகிறார்.

நமது விவசாய கட்டமைப்புகளும் சரி, அதன் பணியாளர்களும் எத்தனை இலக்கில்லாதவர்களாய் இருக்கிறார்கள் என்கிற ஆதங்கம் சம்பந்தப் பட்டவர்களின் கவனத்திற்கு போனால் நல்லது. அப்துல் கலாம் இவரது பண்ணைக்கு வந்து இரண்டு மணி நேரம் செலவழித்ததை பெருமையுடன் கூறுகிறார். 

ஆர்வமுள்ளோருக்கு தானறிந்த நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அவரது மின்னஞ்சல் முகவரி madhur80@hotmail.com

ஆர்வமுள்ளோர் பயன் படுத்திக் கொள்ளுங்கள். நானும் கூடிய விரைவில் இவரை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்.


Sunday, October 3, 2010

ஹைட்ரோபோனிக்ஸ் உர கரைசல்

தேவையான உரம் பற்றிய விவரங்கள்...

http://www.mangalorechemicals.com/products-op-specialty-fertilizers.asp?links=sf



உரக் கரைசல் தயாரிக்கும் முறை

http://www.hydroponicsforyou.co.cc/2009/11/preparing-nutrients.html

எதாவது செய்யனும் பாஸ்!

எனது பாட்டனார் விவசாயி, பரம்பரை விவசாயக் குடும்பம். எனது பெற்றோர் நேரடியாய் விவசாயத்தில் ஈடுபடாவிட்டாலும், விளைச்சல் வீடு வரும், நெல் அவித்ததும், அதை அரவை மில்லுக்கு எடுத்துப் போய் வந்ததும் பசுமையான நினைவுகள். இப்போது விவசாய நிலம் மட்டும் இருக்கிறது, எல்லாம் பங்குக்கு விட்டு காசு மட்டும் வீட்டுக்கு வருகிற்து.

நான் இப்போது கடையில்தான் அரிசி வாங்குகிறேன். எதிர் காலத்தில் பரம்பரை தொழிலான விவசாயத்திற்கு திரும்பிட நினைக்கிறேன். இன்றைக்கு எனக்கு விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை. இழந்து விட்ட வேர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியாக நகரச் சூழலில் எனது வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் பரிசோதனையாக, பயிலரங்காக செய்கிற முயற்சிகளை பதிந்து வைக்கும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள்....

வீட்டுத் தோட்டம், இதுவே எனது தற்போதைய பரிசோதனை மற்றும் முயற்சி....இனி வரும் பதிவுகளில் எனது அனுபவங்களை பகிரவும்,பதியவும் முயற்சிக்கிறேன்.